நெல்லை சிறைவாசலில் கனிமொழி 
தமிழ் நாடு

சிறையில் எம்.எல்.ஏ.வைச் சந்தித்த கனிமொழி!

Staff Writer

முதலமைச்சர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் எனப் பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை நெல்லைச் சிறையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்துப் பேசினார். 

சட்டப்பேரவையில் வாயில்களை அடைக்கச்சொல்லி எனப் பேசிய முதலமைச்சர் விஜய்க்குப் பதிலடியாகப் பேசுவதாக, விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மார்க்கண்டேயன், காட்டமாகப் பேசிவிட்டார். அதற்காக, அவரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று அங்கு சென்ற தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி, மார்க்கண்டேயனைச் சந்தித்தார். அவருடன் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடனிருந்தனர்.