தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை... த.வெ.க. டுவீட் 
தமிழ் நாடு

ஆளுநரோ ஒன்றிய அரசோ கண்டனங்கள்... த.வெ.க. டுவீட்!

Staff Writer

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்காமல் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் அரசியல் தளத்தில் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டன. பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.  

அதைத் தொடர்ந்து, ஆளும் த.வெ.க. சார்பில் இதுகுறித்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது.  

”நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.

எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.” என்று அக்கட்சியின் சமூக ஊடக பதிவில் கூறப்பட்டுள்ளது.