தவெக தலைவர் விஜய் 
தமிழ் நாடு

கரூர் வழக்கு: விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்!

Staff Writer

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தவெக தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கரூரில் கந்து கொண்ட கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே இரண்டு முறை சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். தில்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டு முறை ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்து இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. விஜய் தரப்பில் தேதியை மாற்றுமாறு கோரிக்கை விடுகப்பட்டு இருக்கிறது. ஏனெனில் நாளை தான் வேட்பாளர் நேர்காணலை தொடங்க தவெக திட்டமிட்டிருந்தது.

விஜய்யின் கோரிக்கை சிபிஐ ஏற்குமா, ஏற்காவிட்டால் நாளை விஜய் ஆஜராகி கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.