தலைமைச் செயலகம் 
தமிழ் நாடு

உதயச்சந்திரன் உட்பட முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

Staff Writer

கடந்த ஆட்சியில் செல்வாக்கு செலுத்திய அதிகாரியாகப் பெயர்பெற்ற உதயச்சந்திரன் உட்பட சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தலைமைச்செயலாளராக இருந்து மாற்றப்பட்ட முருகானந்தம், வருவாய் நிர்வாகத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

நிதித் துறைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா பண்பாட்டுத் துறையின் செயலாளராக சுவர்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவுத் துறையின் பதிவாளர் நந்தகுமார் டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

முதல்வரின் செயலாளர்கள்

இத்துடன், ஏற்கெனவே முதலமைச்சருக்கு இரண்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது செயலாளராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்துவருகிறார்.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் செயலாளர் விஷ்ணு, முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.