கிருஷ்ண ஜெயந்தி 
தமிழ் நாடு

ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி .... கிருஷ்ண ஜெயந்திக்கு விஜய் சொன்ன வாழ்த்து!

Staff Writer

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி :

"அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

அநீதிக்கு எதிரான அறம் வெல்லும். எத்தகைய சூழலிலும் தவறாது செயல்பட வேண்டும். தர்மத்தின்வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்." என்று விஜய் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram