வெற்றி முதலீட்டு மாநாடு  
தமிழ் நாடு

புதிய தொழில் முதலீடுகள் - கிருஷ்ணகிரி முதலிடம்!

Staff Writer

தமிழக முதலீட்டு மாநாட்டில் ரூ.6,660 கோடி முதலீடுகளை ஈர்த்து 12,300 வேலைவாய்ப்புகளுடன் கிருஷ்ணகிரி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களும் கணிசமான முதலீடுகளைப் பெற்றுள்ளன.

சென்னையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது வெற்றி முதலீட்டு மாநாட்டின் மூலமாக மொத்தம் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன், ரூ. 58,214 கோடி தொழில்துறை முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மட்டும் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தியாகியுள்ளன.

உத்தேசமான 65,786 வேலைவாய்ப்புகளில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே 19% தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

கிருஷ்ணகிரிக்கு அடுத்ததாக, காஞ்சிபுரம் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் ரூ. 4,188 கோடி முதலீடுகள், 3,980 வேலைவாய்ப்புகளை ஈர்த்துள்ளது.

ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நிலப்பற்றாக்குறை காரணமாக, இனி வரும் காலங்களில் தருமபுரியைப் பரிசீலிக்க உள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ரூ. 2000 கோடி முதலீடு செய்யவிருந்த பிரேசிலைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டின் தருமபுரியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

கிருஷ்ணகிரியில் முதலீடு செய்யவதற்கு ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், பொறியியல் துறைகள் முக்கிய காரணங்களாக உள்ளன.

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் 1000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரூ. 2,000 கோடி முதலீட்டைச் செய்யவுள்ளது.

3,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய டைட்டான் நிறுவனமும், 2,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.1,000 கோடி முதலீடு செய்ய தூத் ஆட்டோமோட்டிவ் நிறுவனமும் திட்டமிட்டுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram