தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களைச் சமர்பிக்க இன்றே (ஜுன் 5) கடைசி நாள்.
பி.இ., பி.டெக். ஆகிய இளநிலைப் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு, கடந்த மே 3ஆம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பம் பதிவுசெய்யப்பட்டு வருகிறது.
மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
மாணவர்கள் 1800-425-0110 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.
ரேண்டம் எண் ஜூன் 10-ஆம் தேதி வெளியிடப்படும்.
தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ஆம் தேதி வெளியாக உள்ளது.
முதல் கட்டமாக, விளையாட்டு வீரர்களுக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது. அவர்களுக்கான சான்றிதழ் சரிபாரிப்பு ஜுன் 1 முதல் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.