மருத்துவர் சுப்பையா 
தமிழ் நாடு

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு- விடுதலை ரத்து!

Staff Writer

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்து தகராறு காரணமாக, கடந்த 2013ஆம் ஆண்டில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா, சாலையில் நடந்துசென்றபோது கொல்லப்பட்டார். கூலிப் படையினர் செய்த இக்கொலை வழக்கில் 10 பேர் சரண் அடைந்தனர். அவர்களில் ஒருவர் அப்ரூவராக மாறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் இவ்வழக்கில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஏழு பேருக்கு மரண தண்டனையும் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. அதை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ததில், அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது. முக்கியமாகக் குற்றம்சாட்டப்பட்ட பொன்னுசாமி, அவரின் மனைவி மேரி புஷ்பம் ஆகியோரின் தண்டனையை மட்டும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.