விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு அமைந்தபிறகு அ.தி.மு.க.விலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையாக பதவிவிலகி வருகின்றனர். இதில் ஆறாவது நபராக இன்று கரூர் விஜயபாஸ்கர்தன் பதவியைத் துறந்தார்.
இன்று முற்பகல் கோட்டைக்கு வந்த அவர், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் தன்னுடைய விலகல் கடிதத்தைக் கொடுத்தார்.
அது அவரால் முறைப்படி 22ஆவது விதிப்படி இருப்பதால் ஏற்றுக்கொண்டதாக அவைத்தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
மற்ற நால்வரைப் போல, விராலிமலை விஜயபாஸ்கரும் இவரும் விரைவில் த.வெ.க.வில் சேர்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதேநேரம், விராலிமலை விஜயபாஸ்கர் தி.மு.க.வுடன் சேர முயல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.