மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் ஜெர்மன் மொழியைக் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சிக் கல்வித் துறை இதில் ஈடுபட்டுள்ளது.
வெளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேயர் இந்திராணி வசந்த் முன்னிலையில் இதன் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.
சனிக்கிழமைதோறும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த வகுப்பு நடத்தப்படும்.
முதல் கட்டமாக 65 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்படும்.