மகளிர் உரிமைத் தொகை திட்டம் 
தமிழ் நாடு

இபிஎஸ் புண்ணியம்... மகளிர் உரிமைத் தொகை உயரும்!

Staff Writer

தமிழ்நாட்டு அரசின் சமூக நலத் துறை மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. 

2003ஆம்ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம், தற்போது தமிழ்நாட்டில் 1.3 கோடி பேருக்கு மாதாமாதம் இத்தொகை வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், புதுச்சேரி அரசாங்கத்தின் சார்பில் அம்மாநிலத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2.5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க அறிவிப்பு செய்யப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 

அத்துடன், கடந்த வாரம் இரண்டாம் கட்டமாகத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமைத் தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்று அறிவித்தார். 

அதையடுத்து, தமிழக அரசின் சார்பில் இப்போதே இத்தொகையை உயர்த்தும் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.