திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், அவரை திமுக கல்வியாளர் அணியின் துணைத் தலைவராக நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் 2002 முதல் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன். அந்த கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.