லஞ்சம்  
தமிழ் நாடு

அமைச்சரிடமே லஞ்சமா? - வெளிப்படையாகச் சொல்லுங்க-ஜெயக்குமார்!

Staff Writer

அமைச்சர் ராஜ்மோகனுக்கு இலஞ்சம் கொடுக்கத் தயாராக இருந்தவர் யார் என்பதை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது:

"இலஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். லயோலா மணியின் மூலமாக ரூ.5 கோடிக்கு ஒருவர் பேரம் பேச வந்தார் என்று அமைச்சர் ராஜ்மோகன் திறந்தவெளியில் கூறுகிறார்.

அந்த ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தது யார் ? அவரை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டியது அவசியம். உண்மையிலேயே முதலமைச்சர் விஜய் நேர்மையாக ஆட்சி நடத்துகிறார் என்றால், அந்த இலஞ்சம் கொடுக்க முன்வந்தவர் யார் என்று மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

அடுத்ததாக, சட்டத்திற்குமுன் அனைவரும் சமம். ஆனால், தற்போது ஊழல் வழக்கில் ஜெயிலுக்குச் சென்றவருக்கு வீட்டில் இருந்து அறுசுவை உணவு செல்கிறது. சட்டத்தை மீறி ஜனநாயகக் கடமையை ஆற்ற விடாமல் மக்கள் வாக்களிக்கத் தடையாக இருந்தவரைப் பிடித்துக்கொடுத்தவருக்கு தரங்கெட்ட சாப்பாடு. இது என்ன ஜனநாயகம்? " என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram