த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி ஆட்சியர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
முன்னதாக, ஆட்சியர் மீதான பாலியல் துன்புறுத்தல் வெளியானபோது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அருள் விக்னேசைக் குறிப்பிட்டு, அவரே பாவம் என்று கூறியிருந்தார்.
விவகாரம் அம்பலமான நிலையில், இன்று காலையில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
"பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.