மாணிக்கம் தாகூர் எம்.பி.  
தமிழ் நாடு

வைகோவுக்கு மாணிக் தாகூர் எம்.பி. பதில்!

Staff Writer

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்துவிட்டு நன்றிகூடச் சொல்லாமல் த.வெ.க.வுடன் சேர்ந்து அமைச்சரவையிலேயே இணைந்துவிட்டது என்று குறிப்பிட்டார். அதற்கு பதில் அளிக்கும்வகையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக் தாகூர் தன் சமூக ஊடகப் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். 

அதில், ” மூத்த தலைவர் வைகோ அவர்களுக்கும், அவர் பொதுவாழ்க்கைக்கு ஆற்றிய நீண்டகால பங்களிப்பிற்கும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

எனினும், உரிய மரியாதையுடன் நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவெனில், நன்றியுணர்வு குறித்த கேள்வியைப் பொறுத்தவரை, அரசியல் கூட்டணிகள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் , மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. May 4ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோதே, பாஜக/ஆர்எஸ்எஸ் தரப்பின் முயற்சியின்படி திமுக மற்றும் அதிமுகவுடன் தொடர்புகள் மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கியது. பாஜகவின் தூண்டுதலின் பேரில் திமுக திரு. எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அதிமுகவுடன் தொடர்புகளை ஆரம்பித்தது் மேலும் மறைமுக dealings நடந்தது் இயல்பாகவே காங்கிரஸ் தலைமைக்கு கவலைகளை ஏற்படுத்தியது.

இத்தகைய சூழ்நிலையில், அந்தக் கவலைகளைப் பற்றி பேசாமல் காங்கிரஸ் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று நியாயமானதோ அல்லது நடைமுறைக்கு ஏற்றதோ அல்ல.

இந்தியா கூட்டணியில் உள்ள எங்கள் மதிப்பிற்குரிய சகாக்கள், திமுகவுடனான தங்களின் ஏமாற்றங்கள் அல்லது கருத்து வேறுபாடுகளில் காங்கிரஸ் கட்சியை இழுத்துச் செல்ல வேண்டாம் என்று நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் தனது கொள்கைகள் தனது தொண்டர்கள் மற்றும் பரஸ்பர மரியாதை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் தனது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து நிற்கும்.” என்று மாணிக் தாகூர் கூறியிருக்கிறார்.