எம்.பி.பி.எஸ் இடம் பெற்ற சுரேஷ்குமார் 
தமிழ் நாடு

51 வயதில் எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பு!

Staff Writer

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் அரசு, சுயநிதி கல்லூரிகளில் மொத்தம் 7,157 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1,383  பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இதற்கு 72,633 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வும் தொடங்கியது.

சிறப்புப் பிரிவு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்புப் பிரிவினர் சேர்க்கை விவரம்:

1) விளையாட்டு வீரர்கள் - விண்ணப்பித்த 468 பேரில் 13 பேருக்கு எம்.பி.பி.எஸ். இடங்களும், 2 பேருக்கு பி.டி.எஸ். இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

2) ராணுவ வீரர்கள் - விண்ணப்பித்த 542 பேரில் 10 பேருக்கு எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒருவருக்கு பி.டி.எஸ். இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

3) மாற்றுத்திறனாளிகள் - விண்ணப்பித்த 224 பேரில் 108 பேருக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயதுடைய சுரேஷ்குமார் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான சேர்க்கை ஆணையைப் பெற்றுள்ளார்.

மேலும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் நிகில், நிக்சிதா ஆகிய இருவருக்கும் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram