தமிழ் நாடு

ம.தி.மு.க.வில் 4 பேர் பேச்சுவார்த்தைக் குழு!

Staff Writer

ம.தி.மு.க.வில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

”சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ம.தி.மு.க. சார்பில் பின்வரும் குழு அமைக்கப்படுகிறது.

1. ஆடிட்டர் அர்ஜூனராஜ் - அவைத் தலைவர்
2. மு.செந்திலதிபன் - பொருளாளர்
3. சு.ஜீவன் - உயர்நிலைக் குழு உறுப்பினர்
4. வி.சேஷன் - தேர்தல் பணிச் செயலாளர். 

இக்குழுவினர் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள்.” என்று    வைகோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.