த.வெ.க. சார்பில் இடைத்தேர்தல் குறித்த சிறப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இந்தத் தொகுதிகளில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
த.வெ.க.விற்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் 4 நாள்கள் பிரசாரம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் ஊரக வளர்ச்சி - நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணி, நெடுஞ்சாலை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், பொறுப்பு அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத், பொறுப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் ,மாவட்ட செயலாளர்கள், த.வெ.க. நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.