த.வெ.க.வின் கொள்கைத் தலைவர்கள் 
தமிழ் நாடு

ரூ.5 கோடியில் கொள்கைத் தலைவர்களுக்குக் கோட்டம்!

Staff Writer

செய்தி - விளம்பரத்துறையின் அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

முக்கியமான அறிவிப்புகள்:

1)  வீரமங்கை வேலுநாச்சியார், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், சுதந்திர போராட்ட வீராங்கணை அஞ்சலையம்மாள் ஆகியோர்களுக்கு ஒருங்கிணைந்த கோட்டம் சென்னையில் ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்படும்.

2)  இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில், ரூ. 2.50 கோடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும்.

3)  தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் – தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தை உலகத் தரத்திற்கு உயர்த்திட ரூ. 9.25 கோடி ஒதுக்கப்படுகிறது.

4)  தமிழ்நாடு திரைப்படப் பிரிவிற்கு ஒளிப்பதிவுக் கருவிகள், படத்தொகுப்புக் கருவிகள் கொள்முதல் செய்ய ரூ. 88 லட்சம் ஒதுக்கப்படுகிறது.

5)  தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் – தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் இளம் படைப்பாளிகளின் திறனை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் நிறுவப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram