முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

மெட்ரோ, எஸ்ஐஆர், நிதி நிராகரிப்பு... கண்டிப்பாக இதை செய்வோம் - எச்சரித்த முதல்வர்!

Staff Writer

எஸ்ஐஆர், தொகுதி மறுசீரமைப்பு, நிதி நிராகரிப்பு, ஹிந்தி திணிப்பு என அனைத்துக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடி வெல்லும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!

கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்ஐஆர் மூலம் வாக்குரிமை பறிப்பு, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு, மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி, நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு, தமிழ்மொழி மீதான தாக்குதல், ஹிந்தித் திணிப்பு என அனைத்துக்கும் எதிராகத் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்!" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மக்கள்தொகை குறைவாக இருப்பதால் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய பாஜக அரசு நிராகரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கிறது என திமுக குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.