வா வாத்தியார் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட படக்குழுவின் மரியாதை செலுத்தினர்.
நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கடந்தாண்டே வெளியாக வேண்டிய படம் தயாரிப்பாளர் சந்தித்த நிதி வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, பொங்கல் வெளியீடாக வருகிற ஜன. 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ், ஆனந்த் ராஜ், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதனை படக்குழுவினரே உறுதி செய்துள்ளனர்.