அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 
தமிழ் நாடு

போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்- அமைச்சர் ஆதவ் எச்சரிக்கை

Staff Writer

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். 

சென்னை, வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான அவர், தொகுதிப் பிரச்னைகள், கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி, காவல்துறை, மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

மக்களுக்கான பிரச்னைகள் குறித்த தகவல்களை அவர் அதிகாரிகளிடம் வழங்கினார். 

அதிகாரிகள் அவரிடம் 10 நாள்கள் அவகாசம் கோரியுள்ளனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ், ஆலோசனை குறித்து விவரித்தார். 

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார். 

சட்டவிரோத மதுவிற்பனை குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்தார். 

பெண்கள் பாதுகாப்பில் கவனம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.