மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா 
தமிழ் நாடு

மீன்வள பல்கலை. பட்டமளிப்பு விழா: ஆளுநர் பங்கேற்பு… அமைச்சர் புறக்கணிப்பு!

Staff Writer

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று 391 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக இணை வேந்தரும் மீன்வளத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அழைப்பிதழில் பெயர் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாக்களை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்த நிலையில்,தற்போது மீன்வள பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram