அமைச்சர் அருண்ராஜ் 
தமிழ் நாடு

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி - அமைச்சர் அருண்ராஜ் தகவல்

Staff Writer

வழக்கம்போல சட்டமன்றம் இன்று கூடியதும் காலை 9.30 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கியது.

உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், "தமிழகத்தில் விரைந்து பரவிவரும் ஹெச்.1.என்.1 காய்ச்சலைக் கட்டுப்படுத்த, முதியவர்கள் அல்லது கர்ப்பிணி பெண்களுக்காவது தடுப்பூசி போடும் திட்டம் அரசிடம் உள்ளதா?” என்று கேட்டார்.

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ்,"பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படுகின்ற ஹெச்1 என்1 காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதனால் மக்கள் அஞ்சத் தேவையில்லை.

கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் அதிகமாக இருந்த இந்த காய்ச்சல், நடப்பு ஆண்டில் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் அதிகமாக இருக்கிறது. இருப்பினும், தொடர் கண்காணிப்பினால் இது கட்டுக்குள் இருக்கிறது.

முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது அதிகமாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளதால், உரிய ஆய்விற்குப் பிறகு தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கான பணிகள் தொடங்கப்படும்.” என்று கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram