மருந்துக்கடை 
தமிழ் நாடு

5 ஆயிரம் மருந்துக் கடைகள் திறந்திருக்கும்- அமைச்சர் அருண்ராஜ்

Staff Writer

நாடு முழுவதும் மருந்துக் கடைகள் தொழில்நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 5 ஆயிரம் மருந்துக் கடைகள் திறந்திருக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.  

மருந்துக்கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட மருந்துக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி நாடு முழுவதும் நாளை மருந்துக்கடை உரிமையாளர்கள் தொழில் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதனால் அவசர மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் ஏற்பட்டது.

இதுகுறித்து புதிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சுகாதார அமைச்சர் அருண்ராஜ் அவசர மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.