தலைநகர் டெல்லியில் 37 நாள்களாக நடைபெற்றுவந்த மாணவர், இளைஞர் போராட்டத்தின் எதிரொலியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார்.
போராட்டத்தை முன்னெடுத்த கரப்பான் ஜனதா கட்சியினர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இன்று மதியம்வரை அவகாசம் கேட்கப்பட்டது.
இந்நிலையில் பிரதானின் பதவிவிலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால், இதை வரவேற்றுள்ள கரப்பான் ஜனதா கட்சியினர் தங்களின் மூன்று கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்றினால்தான் போராட்டத்தை முடிப்போம் என்று கூறியுள்ளனர்.
அதாவது, உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்குவது, மாணவர்கள் மீது வழக்குகள், நடவடிக்கைகள் கூடாது ஆகியவற்றையும் நிறைவேற்ற வேண்டும் என்பனவற்றையும் நிறைவேற்றுவது அவர்களின் மற்ற இரண்டு கோரிக்கைகள்.
இன்று பிற்பகலில் மத்திய அரசுக்கும் கரப்பான் கட்சியினருக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.