சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி 
தமிழ் நாடு

துணை சபாநாயகர் கோரிக்கை- அமைச்சர் நேரு சொன்ன பதில் என்ன?

Staff Writer

சட்டப்பேரவையில் இன்று காலையில் கேள்வி பதில் நிகழ்ச்சி வழக்கம்போல தொடங்கியது. அப்போது, பேரவைத் துணைத் தலைவரான பிச்சாண்டி, அவருடைய கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் உள்ள சில பிரச்னைகளைப் பேசினார்.

“கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் ஒரு பேருந்துநிலையம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, அது கட்டப்படுகிறது; அது புதுச்சேரி- பெங்களூர் சாலையில் இருக்கும்நிலையில், அது சிறிதளவிலான இடமாக இருக்கிறது; அதற்கு அதிக பணம் அதிகமாக வேண்டும் எனக் கேட்கிறார்கள். அமைச்சர் நேரு கூடுதல் நிதி ஒதுக்கி அதைச் செய்துதர வேண்டும். வேட்டவலம் பேரூராட்சியிலும் இதேபோல பேருந்துநிலையத்தை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கப்படுமா? அலுவலகங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்குமா என்பதையும் அறிய விரும்புகிறேன்.” என்று பிச்சாண்டி பேசினார். 

அவருக்குப் பதில்கூறிய அமைச்சர் நேரு, “ மொத்தம் 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. 110 பேரூராட்சிகளில் சராசரியாக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 38 இடங்களில் புதிய பேருந்துநிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.” என்று தெரிவித்ததுடன்,

பிச்சாண்டி சொன்ன இரண்டு இடங்களிலும் நிலம் குறுகியதாக இருக்கிறது என்றும் நிலத்துக்கு 100 ரூபாய் என்றால் 240 ரூபாய் எனுமளவுக்கு விலை தரலாம் என்பது அரசின் முடிவு; அவர் பேசி நிலத்தை வாங்கித் தந்தால் உடனடியாக விரிவாக்கம் செய்யலாம் என்றும் அமைச்சர் நேரு கூறினார்.