அமைச்சர் நிர்மல்குமார் 
தமிழ் நாடு

செய்தியாளர்களை முதல்வர் சந்திக்க வேண்டியதில்லை- நிர்மல்குமார்

Staff Writer

செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருக்கிறார். 

மதுரையில் இன்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

செய்தியாளர்களைச் சந்திப்பது எனும் அளவுகோலைக் கட்டாயப்படுத்த வேண்டாம்; எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திப்பார்; அவர் மக்களைத் தொடர்ச்சியாக சந்தித்தபடி இருக்கிறார் என்றார் நிர்மல். 

மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைதிதான் முக்கியம்; இரண்டு ஆண்டுகளுக்குமுன்னர் என்ன நிலை இருந்ததோ அதுவே தொடரவேண்டும் என்றும் அமைச்சர் நிர்மல் கூறினார்.