அமைச்சர் ராஜ்மோகன் 
தமிழ் நாடு

அமைச்சர் ராஜ்மோகனிடமே பேரம்... இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடியாம்!

Staff Writer

இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்காகத் தனக்கு ரூ.5 கோடி தருவதாக ஒருவர் கூறினார் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில், நேற்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், தலைமைதாங்கிப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடிவரை பேரம் பேசப்பட்டதாகவும், அதை இவர் மறுத்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், "இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைத் தனக்கு கொடுத்தால், ரூ.5 கோடி கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாக ஒருவர் கூறினார். அவர் ரூ.500 கோடி கொடுத்தாலும், பரிந்துரையின் பேரில் முதல்வர் விஜய் பதவி வழங்கமாட்டார் என்று அந்த நபரிடம் கூறினேன்." என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram