தமிழ் நாடு

பிஎம்ஸ்ரீ திட்டம்- அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம்: அமைச்சர் ராஜ்மோகன்

Staff Writer

மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தை ஏற்றுக்கொள்வது பற்றி அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

சென்னை, எழும்பூரில் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில், முதல் மூன்று வகுப்புகளுக்கான புதிய பாடநூல் பயிற்சியை அவர் இன்று தொடங்கிவைத்தார்.

பின்னர், செய்தியாளர்கள் அவரிடம் பிஎம்ஸ்ரீ திட்டத்தைப் பற்றி கேட்டனர்.

அதற்கு அவர், “ இரண்டு ஆண்டுகளாக நமக்கு அதனால் நிதி வராமல் போயிருப்பது துயரம். எந்தவித மறைமுக அழுத்தத்துக்கும் இந்த அரசு அடிபணியாது.” என்று கூறினார்.