குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வரவில்லை என முறையிட்ட பயணியிடம் அமைச்சர் சம்பந்தம் இல்லாமல் பேசியது சமூக ஊடகங்களில் பரபரப்பு ஆகியுள்ளது.
சென்னை, கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்காக முன்பதிவு செய்து பயணிகள் காத்திருந்தனர். ஆனால் பல மாவட்டங்களுக்கும் செல்லவேண்டிய பேருந்துகள் உரிய நேரத்தில் வராததால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
நேற்று இரவு நிகழ்ந்த இந்த சம்பவத்தின்போது புதிய போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பயணி ஒருவர் முறையிட்டார்.
அதற்கு அமைச்சர் சம்பந்தமே இல்லாமல், பயணியிடம், “தம்பி, நீ நல்லா சாப்பிட்டிருக்கே... நான் சாப்பிடக்கூட இல்ல.” என்று கூறியதும், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனிருந்த பாதுகாவலர் அந்தப் பயணியின் மீது கையைவைத்து அழுத்த, சுதாரித்துக்கொண்ட அமைச்சர் அவரை நகருமாறு கூறி சமாளித்தார்.