அமைச்சர் வன்னியரசு 
தமிழ் நாடு

கல்லெறிந்த தி.மு.க.வினர்- அமைச்சர் வன்னியரசு சாடல்

Staff Writer

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நேற்று திரண்ட வி.சி.க. தொண்டர்கள் மீது தி.மு.க.வினர் கல் எறிந்து தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மதுரைக்குச் சென்றுள்ள அமைச்சர் வன்னிரசிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஏற்புடையது அல்ல. ஏற்கெனவே அங்கு வி.சி.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. கட்சியின் தலைவர் திருமாவளவன் வி.சி.க. மாவட்டச் செயலாளரைத் தொடர்புகொண்டு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என அறிவுறுத்தினார். ஆனாலும் மற்ற வி.சி.க.வினர் தகவல் அறியாமல் அங்கு வந்துவிட்டார்கள். வந்திருந்தவர்கள் மீது தி.மு.க.வினர் கல்லெறிந்து மிக மோசமான வன்முறைச் செயலை அரங்கேற்றியிருக்கிறார்கள்.” என்று கூறினார். 

“தி.மு.க.வுடன் நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளும் அதற்கு முன்னரும் பயணம் செய்துள்ளோம். அண்ணன் ஆ.இராசாவுக்கு வி.சி.க.மீது என்ன கோபமோ தெரியவில்லை. ஆனால் நாங்கள் நாகரிக அரசியலை மேம்படுத்தக்கூடியவர்கள், விரும்புபவர்கள். அதை முன்னெடுப்பவர்கள்.” என்றும் அமைச்சர் வன்னியரசு கூறினார்.