சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தி.மு.க. ஆதரவு தந்தது நூறு சதவீதம் உண்மை என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
சென்னையிலிருந்து தொகுதிக்குத் திரும்பிய அவர் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதைக் கூறினார்.
ஒரு வாரத்துக்கும் மேலாகவே இந்த விவகாரம் பற்றி தகவல்கள் வெளியாகின. நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, எடப்பாடி பழனிசாமி ஆதர்வு அளிக்க பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், முன்னாள் மு.க.ஸ்டாலின், அவரின் மருமகன் சபரீசன், உதயநிதி, எடப்பாடி மகன் மிதுன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து, மதிரையில் இன்று நிர்மல்குமாரும், எடப்பாடி பழனிசாமியைப் பின்புற வழியாக முதலமைச்சராக ஆக்க தி.மு.க. முயன்றது என்று கூறியுள்ளார்.
இரு தரப்பினரும் இரகசிய சந்திப்புகளில் ஈடுபட்டதாகவும் ஆனால் மக்கள் தீர்ப்பின்படி இந்தப் புறவழி முயற்சி தோல்வி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்போதைய சூழலில் சரியாக இருக்காது என்பதற்காக, முதலமைச்சர் விஜய் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவில்லை என்றும் நிர்மல்குமார் கூறினார்.