அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் 
தமிழ் நாடு

ரூ.100 கோடி நில மோசடியா?- பொய்ச் செய்தி... அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!

Staff Writer

பழனியில் கோயில் நிலத்தை 100 கோடி ரூபாய் மதிப்பு இருந்தும் இரண்டு கோடி ரூபாய்க்கு மோசடியாக அமைச்சர் ரமேசின் உறவினருக்கு விற்பனை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, தி.மு.க. அதிகாரபூர்வமாகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துப் பரப்பியது.

சமூக ஊடகங்களிலும் யோக்கியம் பேசும் அமைச்சர் ரமேஷ் இப்படி அயோக்கியத்தனம் செய்யலாமா என வகைதொகையாகக் கண்டனமும் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், புதிதுபுதிதாக தனக்கு உறவினர்களை உருவாக்குகிறார்கள்; அப்படி யாரும் என் உறவினர் இல்லை; பொய்ச்செய்தி பரப்பிய ஊடகங்கள், தனி நபர்கள் மீது புகார் அளித்திருக்கிறேன்; விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும், குறிப்பிட்ட அந்த நிலம் பதிவுசெய்யப்பட்டது தவறு என அருகில் இருந்த பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் குறிப்பிட்டார்.

நீதிமன்ற உத்தரவைக் காட்டி அந்த நிலத்தைப் பதியச்செய்த அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளதாகவும் இதில் யார் மீது தவறு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.