மோடியுடன் ஸ்டாலின் 
தமிழ் நாடு

மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரிகளில் 50 சதவீத பகிர்வு! ஸ்டாலின் வலியுறுத்தல்!

Staff Writer

மாநிலங்களுக்கு தரவேண்டிய 41 சதவீத வரிப் பங்கீட்டுக்குப் பதிலாக இப்போது 33.16% சதவீதம் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து பெறுவதாகவும் இது 50% ஆக உயர்த்தப்படவேண்டும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளார்.

இத்துடன் “ அம்ருத் 2.0 திட்டத்தில் தமிழகத்திற்கு தனியாக திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை போல காவிரி, வைகை, தாமிரபரணி நதிகளுக்கும் திட்டம் வேண்டும். திட்டம் தொடர்பான பெயர்களை ஆங்கிலத்தில் வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு மறுக்கப்பட்ட ‘சமக்ர சிக்சா அபியான்’ திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். 2024 - 25ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 2200 கோடி நிதி மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை உடனேவிடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளேன்’’ என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.