முதல்வர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

முன்னாள் அமைச்சர் மூர்த்தி இடங்களில் ரெய்டு!

Staff Writer

தி.மு.க. முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியில், வணிக வரி - பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் பி. மூர்த்தி. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் உள்ள செம்மண், கல் குவாரிகளில் விதிகளை மீறி செம்மண், கற்களை வெட்டி எடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தியைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.

கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.

மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே ரெய்டு நடத்தப்படுகிறது

அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு தி.மு.க. வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய், இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது." என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram