வாக்களித்த பின்னர் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
வாக்களித்த பின்னர் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

மு.க.ஸ்டாலின், பழனிசாமி, அண்ணாமலை வாக்களிப்பு!

Staff Writer

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் எஸ்.ஐ.இ.டி. கல்லூரியிலும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரிலும், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூர் தொகுதியிலும் வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில், சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

வாக்குச்சாவடியில் முதலமைச்சர் ஸ்டாலின்

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். வாக்குரிமை பெற்றிருக்கும் அனைவரும் மறந்திடாமல், புறக்கணிக்காமல் வாக்கு செலுத்த வேண்டும்.” என்று கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள தன் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செலுத்தினார்.

வாக்குப்பதிவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குப்பதிவு செய்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அண்ணாமலை

கரூர் மக்களவைத் தொகுதி, க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் பெற்றோருடன் சென்று வாக்கு செலுத்தினார்.