பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் சேலத்தில் நேற்று பிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து சென்னை மருத்துவமனைக்கு இராமதாஸ் கூட்டிவரப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலையில் முதலமைச்சர் இராமதாசிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். இரண்டு நாள்களில் வீட்டுக்குச் சென்றுவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பதை முதல்வரிடம் இராமதாஸ் கூறினார்.
நலம் விசாரித்ததற்காக முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.