குடியரசுத் தலைவரிடம் ஸ்டாலின் மனு கோப்புப்படம்
தமிழ் நாடு

ஜனாதிபதி முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பிய மனு!

Staff Writer

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.  

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு: 

”97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?

வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே?

இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்!

ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை SIR ரத்து மீண்டும் வாக்குச்சீட்டு முறை

உட்பட்ட கோரிக்கைகளுடன் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன்.

வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை!

ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும்.

நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும்!” என்று முர்முவுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.