வாகன உதிரி பாக நிறுவனங்கள் 
தமிழ் நாடு

வேகமாக ரிவர்ஸ் கியரில் செல்லும் தமிழகம்- மு.க.ஸ்டாலின்

Staff Writer

தமிழகம் அழிவின் விளிம்பில் இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய், கியா நிறுவனங்களின் முக்கிய விநியோகஸ்தர்களாக இருக்கும் 3 நிறுவனங்கள், தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ஆகிய இடங்களில் ஆலையமைக்கப் பரிசீலித்துவந்த நிலையில், தற்போது ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் தங்கள் உற்பத்தி ஆலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கு ஆந்திர அரசு நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகள், த.வெ.க. அரசின் அலட்சியப்போக்கும்தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது:

"ஜி.எஸ்.டி. வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ஈகோவுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக ரிவர்ஸ் கியரில் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து ஷோ காட்டக் கிளம்பிவிட்டார்.

த.வெ.க. ஆட்சியில் அழிவின் விளிம்பில் தமிழகம் செல்வதால், கடினமானக் காலங்களை எதிர்கொள்ளத் தமிழக மக்கள் தயாராக இருக்க வேண்டும்." என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram