முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

கர்நாடகத்துக்குச் செல்ல வேண்டாம்- விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Staff Writer

பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர், காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை என்று குறிப்பிட்டுள்ளார். 

”நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!

கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.