திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் ஆலங்குளம் எம்எல்ஏ-வுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் செவ்வாய்க்கிழமை காலை இணைந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து, தனது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் வழங்கினார். அவரின் ராஜினாமா கடித்ததை ஏற்றுக் கொள்வதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், அதிமுகவிலிருந்து மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்ட நிலையில், பாஜகவின் கிளை அலுவலகமாக அதிமுக செயல்படுவதால், திமுகவில் இணைவதாகக் கூறினார்.