செங்கோட்டையன் 
தமிழ் நாடு

இன்று எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா... நாளை விஜயின் கோட்டையில் செங்கோட்டையன்? சஸ்பென்ஸ் தாங்கலையே..

Staff Writer

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார்.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறிவந்த செங்கோட்டையன், திடீர் திருப்பமாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் செங்கோட்டையன் இணைய இருப்பதாகத் தகவல் வெளியானது.

முன்னதாக செங்கோட்டையனை தவெக நிர்வாகி ஆதவ அர்ஜுனா, வியூக வகுப்பாளர் யான் ஆரோக்கிய சாமி ஆகியோர் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தகவல் குறித்து, செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காதது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமாரும், செங்கோட்டையன் பற்றிய கேள்விக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், கோவையிலிருந்து சென்னைக்கு வந்த செங்கோட்டையன், தனது கோபி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவிடம் தனது பதவி விலகல் கடிதம் அளித்தார்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மட்டும் 8 முறை போட்டியிட்டு 8 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் செங்கோட்டையன். இவர் பள்ளிக்கல்வி, வனம், வருவாய், விவசாயம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.