மேற்கூரை சூரிய மின்சக்தி  
தமிழ் நாடு

வீட்டு மாடி சூரிய மின்சக்தி- 10 நாள்களில் 16,500 விண்ணப்பங்கள்!

Staff Writer

தமிழகத்தில் வீட்டு மாடி சூரிய மின்சக்தி அமைக்க மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டில், இல்லந்தோறும் சூரிய மின்சக்தி திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நத் திட்டத்தின் மூலமாக, வீடுகளின் மாடியில் சூரிய மின்சக்தி அமைக்க மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்க, மானியம் வழங்கப்படும் என்று மாநில அரசு சார்பில், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.  

இதன்படி, ஒரு கிலோவாட் மின் உற்பத்தித் திறனுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 30,000, மாநில அரசு சார்பில் ரூ. 5,000 என மொத்தம் ரூ. 35,000 மானியம் வழங்கப்படுகிறது.

அடுத்து, 2 கிலோவாட் மின் உற்பத்தித் திறனுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 60,000, மாநில அரசு சார்பில் ரூ. 10,000 என மொத்தம் ரூ. 70,000 மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், 3 கிலோவாட் மின் உற்பத்தித் திறனுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 78,000, மாநில அரசு சார்பில் ரூ. 22,000 என மொத்தம் ரூ. 1,00,000 மானியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வீட்டு மாடியில் சூரிய மின்சக்தி அமைக்க தமிழக அரசு மானியம் அறிவித்த 10 நாள்களில், 16,500 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram