நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன் 
தமிழ் நாடு

ரூ.4 கோடி- நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன்!

Staff Writer

பா.ஜ.க. சட்டமன்றக் குழுத் தலைவரும் நெல்லை மக்களவை வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் மீது தேர்தலுக்காகப் பணம் பதுக்கிவைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருடைய ஓட்டல் பணியாளர்கள் தொடர்வண்டியில் 4 கோடி ரூபாய் கொண்டுபோனபோது பிடிபட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

கடந்த 22ஆம் தேதியன்று நயினார் நாகேந்திரனை சென்னையை அடுத்த தாம்பரம் காவல்துறையினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பினர். வேறு வழக்கு விசாரணையில் பங்கேற்க வேண்டியிருந்ததால் அன்றைக்கு நேரில் வர முடியாது என்ற அவர், 10 நாள் அவகாசமும் கேட்டிருந்தார். 

ஆனால் அவருடன் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் நேற்றுமுன்தினம் தாம்பரம் மாநகரக் காவலதுறையினரிடம் நேரில் வாக்குமூலம் அளித்தனர். 

அதன்தொடர்ச்சியாக, நயினாருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 

இது குறித்து ஊடகத்தினரிடம் பேசிய நயினார், பிடிபட்டவர்கள் எனக்குத் தெரியும்; அந்தத் தொகையைப் பற்றி தெரியாது என்றும் வரும் மே 2ஆம் தேதி காவல்துறையினர் முன் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.