தமிழ் நாடு

ஈரோடு தமிழன்பன், ஆனைமுத்து நூல்கள் நாட்டுடைமை!

Staff Writer

முதுபெரும் பெரியாரியல்வாதியும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முன்னைய தலைவருமான ஆனைமுத்துவின் நூல்கள் அவரது மறைவுக்குப் பிறகு நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 

இதற்காக அவரின் மரபுரிமையர்களுக்கு மொத்தம் 20 இலட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் கவிஞா் ஈரோடு தமிழன்பனின் நூல்களுக்காக அவரின் மனைவி தி.பா.சாந்தகுமாரியிடம் நூலுரிமைத் தொகை ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் இந்நிதியை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.