இந்திய மாணவர் சங்கத்தினர் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் கோப்புப் படம்
தமிழ் நாடு

1,800 பேர் மீதான நீட் எதிர்ப்புப் போராட்ட வழக்குகள் வாபஸ்!

Staff Writer

நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

”தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் 31.07.2026 வரை நீட்தேர்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில் நீட்தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும்  முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில், முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு இவ்வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து கவனமுடன் பரிசீலனை செய்து, நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.” என்று  தமிழ்நாட்டு அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.