நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கேட்பு முடிவுகள் பலவும் இன்று மாலையில் ஒவ்வொன்றாக வெளியாகின.
இதில் பெரும்பாலான முடிவுகள், ஆளும் தி.மு.க.வே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியுள்ளன.
ஆகிசிஸ் மை இண்டியா எனும் ஒரு நிறுவனம் மட்டும் இந்தியா டுடே சேனலுடன் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கேட்பில், த.வெ.க. 98 முதல் 120 இடங்கள்வரை பிடிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
இதே சமயம், தி.மு.க. 92-110 இடங்கள்வரை பிடிக்கக்கூடும் என்றும் அதுதெரிவித்துள்ளது.
ஓட் வைப் நிறுவனத்தின் முடிவுப்படி, அ.தி.மு.க.வுக்கு 114-124 இடங்களும் தி.மு.க.வுக்கு 103-113 இடங்களும் கிடைக்கலாம்.
டைம்ஸ் நவ் சேனலுடன் இணைந்து ஜேவிசி நிறுவனம் செய்த முடிவுப்படி, அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் அளவுக்கு 128-147 இடங்களைப் பிடிக்கும் என்றும் தி.மு.க. 75-95 இடங்களை மட்டுமே பிடிக்கும் என்றும் தகவல்.
பல்வேறு முடிவுகள் வந்துள்ளதால், அவரவர் சார்பு நிலைக்கு ஏற்ப வலைவாசிகள் கருத்துக்கேட்பு முடிவுகளை கலாய்த்துத் தள்ளுகிறார்கள்.