வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து வளைகுடா பகுதி, மியான்மரில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதாகவும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு அந்தமானில் உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு பகுதியில் நகரலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக, தென்கிழக்கு - கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இது தமிழகத்தின் வடகடலோரப் பகுதியிலும், தெற்கு ஆந்திராவினுடைய கடலோரப் பகுதியிலும் நெருங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்த பிறகுதான், காற்றின் திசையை உறுதியாகத் தீர்மானிக்க முடியும் என்று வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறித்த அடுத்தகட்டத் தகவல்கள் வரும் நாள்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.