விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் சில நாள்களுக்கு முன்னர் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.
பரபரப்பான தேர்தல் காலம் என்பதால், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண உதவிகளில் மும்முரம் காணப்படவில்லை.
இந்த நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் இந்தக் கொடூர விபத்தை ஊடகங்கள் மூலம் அறிந்து சுயவழக்காக எடுத்துக்கொண்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச்செயலாளர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படியும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதில், காயமடைந்தவர்களின் தற்போதைய நிலைமை, வழக்கு விசாரணை நிலவரம், இறந்தவர்கள், காயம்படைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால் அது தொடர்பான விவரம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.